Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

தயிர், மோர், பால் ஆகியவற்றை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்?


உணவுகள் மற்றும் பானங்களை சரியான நேரத்தில் உட்கொண்டால்தான் நோய்களை தவிர்க்கலாம். எந்த நேரத்தில் எவற்றை சாப்பிட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பால், தயிர், மோர் இந்த மூன்றையும் நிறைய பேர் விரும்பி பருகுவார்கள். ஆயுர்வேதத்தில் இந்த மூன்றையும் உட்கொள்வதற்கான சரியான நேரம் குறித்து பார்ப்போம்.

பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். அதைவிட இரவு நேரம்தான் நல்லது. உடல் சோர்வை நீக்கி ஆழ்ந்த தூக்கத்தை தரும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. காலையில் பால் குடித்தால் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நீடித்திருக்கும். முதியவர்கள் மதிய வேளையில் பால் பருகலாம். பால் ஜீரணமாவதற்கு தாமதமாகும் என்பதால் அதனுடன் மற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.

நண்பகலுக்கு முன்பாக தயிர் சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. தயிரை சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

மோரை எந்த நேரத்திலும் பருகலாம். மதிய உணவு சாப்பிட்டதும் பருகுவது நல்லது. மாலை, இரவு வேளையில் மோர் பருகுவதாக இருந்தால் பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொள்ளுங்கள். வயிற்று பிரச்சினைஇருந்தால் காலையில் வெறும் வயிற்றில் மோர் பருகலாம். நல்ல பலன் தரும்.

No comments:

Post a Comment