Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பதால் உருவாகும் நன்மைகள்!


நமது பாரம்பரிய சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடம் உண்டு. அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை தாளிப்பது வழக்கம். ஆனால் தற்போதைய பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் பலரும் அதை பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். கறிவேப்பிலையின் பயன்களை பட்டியலிட்டால் அதை இனி யாரும் தூக்கியெறிய மாட்டார்கள்.

உணவு பொருட்களில் இருக்கும் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குள் பலவிதமான நன்மைகள் நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உறுதி பெறும். பசியை தூண்டிவிடும். பசியின்மையை சரி செய்கிறது.

கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உடலின் பித்தம் குறைக்கப்படும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது. கறிவேப்பிலை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். சீதபேதி வயிற்று உளைச்சல், குமட்டல் மற்றும் நாள்பட்ட காய்ச்சலை தீர்க்க உதவுகிறது.

வாந்தி, ருசியின்மை , வயிற்றுப் போக்கு, பசியின்மை, சளி போன்ற பல பிரச்சனைகளை உடலுக்குள்ளேயே சரி செய்ய உதவுகிறது. கண்களின் பார்வைக் குறைப்பாட்டை நீக்குவதிலும், நரை முடி , பளபளப்பான உடலைப் பெறவும் உதவி செய்கிறது.

கறிவேப்பிலையில் உள்ள இரத்த வெள்ளையணுக்கள் உடல் பலம் பெற உதவும். டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்களும் தினமும் கறிவேப்பிலை துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ளலாம். கறிவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவோடு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர முடி நன்கு வளரும்.

No comments:

Post a Comment