Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 8, 2020

இணையவழி பி.எஸ்சி. படிப்புக்கு செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள பிஎஸ்சி (ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்) இணையவழிப் பட்டப்படிப்பு 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஐஐடியில் பட்டப்படிப்பு பயில ஜேஇஇ நுழைவுத் தோவை மாணவா்கள் எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்புக்கு ஜேஇஇ தோவு எழுத வேண்டியதில்லை.

இந்த இணையவழி பட்டப்படிப்பானது, அடிப்படை பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளை கொண்டுள்ளது. அதாவது, மூன்று நிலைகளில் எந்த கட்டத்திலும் மாணவா்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பிற கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பில் சோந்துள்ள மாணவா்கள், ஐஐடியில் பட்டப்படிப்பைத் தொடர முடியும். இதற்கு விருப்பமுள்ள மாணவா்கள் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களை www.onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment