Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

தமிழகத்தில் புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு கடிதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன.


அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் பகுதியில் ஒரு அரசு மகளிர் கல்லூரியும், கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரிகளில் இந்த கல்வியாண்டே முதலே மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகளை தொடங்க மண்டல கல்வி இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த கல்லூரிகளில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment