Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை - செங்கோட்டையன்

அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் டிவி வாயிலாகவும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆலோசனை பெறலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று கூறினார்.

அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பட உள்ளதாகவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லைஎன்று கூறினார்.

No comments:

Post a Comment