Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 2, 2020

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 பேர் 7 ஆண்டுகளாக பணியமர்த்தாத அதிமுக அரசு - ஆசிரியர் சங்கம் கண்டனம்!


2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த 94 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் 7 ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் அவர்களது டெட் தேர்வு சான்றிதழ் காலாவதியாகியுள்ளது.

இந்த நிலையில், தகுதி தேர்வு எழுதி 7 ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தை எண்ணி மேலும் இரண்டு ஆண்டு காலம் நீட்டிப்பு செய்திடவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2013 ம் ஆண்டு 94 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 14 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்கியது.

மேலும் 80 ஆயிரம் பேருக்கு 5 ஆண்டுகளில் பணி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்த நிலையில் பணி கிடைக்காது காத்திருந்த ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகள் முடியும்போது மேலும் இரண்டு ஆண்டுகள் அரசு நீட்டிப்பு செய்தது இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

இதனால் தகுதி தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த கொடுமையான கொரோனா காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேலும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என கூறியுள்ளார். இதற்கு தமிழநாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு தெரிவித்துக்கொள்கிறது.

2011 முதல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே ஆசிரியர் பணி என்பது அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு மட்டும் அல்ல தனியார் பள்ளிகளுக்கும்தான். ஆனால் அதுபோல் தனியார் பள்ளிகளில் அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தவில்லை அதனால் தான் தேர்வு எழுதிய ஆசிரியார்கள் பணிகிடைக்காதோர் எண்ணிக்கை அப்படியே உள்ளது.

பல லட்சம் ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்து அரசுக்கு பணம் ஈட்டும் பணியில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்ட நிலையில். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி, அரியர் எழுதும் மாணவர்களுக்கு அரியர் ரத்து, என அறிவிக்கும் அரசு வேலை இல்லாமல் தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் கொரோனா காலத்தில் அதிர்ச்சி தரும் வகையிலும், அவர்களை புறக்கணிக்கும் விதமாக அரசு நீட்டிப்பு இல்லை என அறிவித்துள்ளது,

காத்து இருக்கும் 80 ஆயிரம் ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினரை காத்திடும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து அரசும் பள்ளிக் கல்வித்துறையும் அறிவித்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கேட்டுகொள்வதாக அதன் மாநில தலைவர் கு.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment