Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 2, 2020

புதிய கல்விக் கொள்கை: கேள்வி- பதில் நிகழ்வை ஒத்திவைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர்


புதிய கல்விக் கொள்கை குறித்து சமூக வலைதளத்தில் நடைபெறுவதாக இருந்த கேள்வி-பதில் நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு,புதிய கல்விக் கொள்கை ஆளும் பாஜக அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன

இதற்கிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''புதிய கல்விக் கொள்கை குறித்து சமூக வலைதளத்தில் நானும், கல்வித்துறை அமைச்சகமும் செப்டம்பர் 1-ம் தேதி நாள் முழுவதும் பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளோம். மக்கள் தங்களின் கேள்விகளை NEPTransformingIndia என்ற ஹேஷ்டேகுடன் இணைத்துக் கேட்கலாம்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து நடைபெறுவதாக இருந்த கேள்வி- பதில் நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்துக் கல்வி அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், ''குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு காரணமாக NEP2020 குறித்த பிரச்சாரத்தைத் தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளோம். கேள்வி- பதில் நிகழ்வுக்கான புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment