JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

குறிஞ்சா கீரையை பற்றி சிலர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும் கொடி வகை வகைத்தாவரம். இது கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.
குறிஞ்சாக் கீரை இரண்டு வகைப்படும். அவை சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான். இவை தானாகவே வளரும் இயல்புடையது.
குறிஞ்சா இலைகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவும் நீரழிவு நோயாளர்களை இன்சுலின் எடுப்பதை தவிர்க்க செய்வதும் இதன் மருத்துவ குணமாகும்.
இந்த கீரை நீரழிவு நோயாளர்களுக்கு அரு மருந்தாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உணவாக கருதப்படுவது குறிஞ்சாக்கீரை. சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறிஞ்சாக்கீரை சிறந்த மருந்தாகும்.
மேலும் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். இதனை வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
இரவில் குறிஞ்சா கீரையை சுடு தண்ணீரில் போட்டு அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் அந்த கசாயத்தை குடித்தால், இரண்டே நாட்களில் குடற்புண்கள் முற்றிலும் நீங்கும்.
வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கிராமத்தில் உள்ள பலருக்கும் இந்த கீரையை பற்றி தெரிந்திருக்கும். இதனை அனைவரும் பயன்படுத்தி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்போம்.
No comments:
Post a Comment