Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 11, 2020

உடல் எடையைக் குறைக்க உதவும் 'காளான்'

சைவ உணவுகளில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான உணவு காளான். காளானில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும்கூட

காளானில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காளான் உதவும்.

எந்தவகையான காளானாக இருந்தாலும் வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தபின்னர் சமைப்பது நல்லது.

காளானை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும்.

வாரத்திற்கு ஒருமுறை காளான் சாப்பிட்டு வந்தால் ஓரிரு மாதங்களில் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக இளம்வயதினர் காளானை அதிகளவு உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவுகிறது.

உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

உடல் கொழுப்பைக் குறைகிறது. பெண்களுக்கு கருப்பை நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இவ்வளவு பயன்கள் இருந்தாலும் சிலர் காளான் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தாய்ப்பாலை வற்ற வைக்கும் என்பதால் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வயதானவர்களும் காளான் வகைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment