Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 5, 2020

தேர்ச்சி பட்டியலில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவகள்! மாணவர்களுக்கு பெருகும் ஆதரவு!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் தேர்ச்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்.

இது தொடர்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருப்பதில் நியாயமான பார்வை இல்லை.தேர்வு கட்டணம் செலுத்த வழியில்லாத மாணவர்களையும் இந்த தேர்ச்சி பட்டியலில் சேர்த்து இருக்க வேண்டும் அதுதான் சரியானதாக இருக்கும்.

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடே ஆறேழு மாதங்கள் முடங்கி விட்டது.தொழில் முடக்கம்,பணி முடக்கம் காரணமாக ஏழை,எளிய மக்களின் வருவாய் சுருங்கி விட்டது என்பது அரசு அறியாத ஒன்றல்ல.

இதன் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் மாணவர்களில் பலரும் தேர்வு கட்டணம் செலுத்த தவறினர்.இதனிடையே அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் கொரோனா நெருக்கடி சூழலை கவனத்தில் கொண்டு தேர்வு கட்டணம் செலுத்தும் இறுதி நாளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக ஜூன் 4, 2020ல் அறிவித்திருந்தது.

இதனிடையே அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக அறிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொள்ளாமல் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக ஆகஸ்ட் 26 அன்று அறிவிப்பு செய்தது.இதனால் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் தேர்வில் தோற்று விட்டதாக அரசு நினைக்கிறதா?

ஆனால்,இதனை அறிவார்ந்த செயலாகவோ நியாயமுடையதாகவோ,ஏற்க தக்கதாகவோ கொள்ள முடியாது.தேர்வு கட்டணம் செலுத்த தவறிய மாணவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கி இருக்க வேண்டும்.அல்லது தவணை முறையில் கட்டணம் செலுத்த அனுமதி வழங்கி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களை மட்டும் ஃபெயில் ஆக்குவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனக் கவலையை தரும்.மாணவர்கள் நடுவில் பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் செயலுமாகும்.

எனவே,தமிழக அரசு தேர்வு கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களையும் தேர்ச்சிப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.மாணவர்கள் எதிர்கால தலைமுறையினர்.அவர்களின் கல்வி மற்றும் அதுசார்ந்த வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கெட அரசே காரணமாகி விடக் கூடாது.

முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் அரசு ஏழ்மையான மாணவர்கள் மீதும் அக்கரை காட்டி அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment