Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 5, 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் NET தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (NET) எழுத உள்ளவர்களுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சிவகுப்பு தொடங்க உள்ளது.

இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (NET-2020-paper-1) இலவச பயிற்சி வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் ஆலோசனை மையத்தில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்க தகுதியுள்ளவர்கள்.

செப்டம்பர் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை தாள்-1க்கான பயிற்சி வகுப்புகள் காணொலி மூலம் நடக்கும். 

இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை 5ம் தேதி முதல் சென்னைப் பல்கலைக் கழக இணைய தளத்தின் (www.unom.ac.in) மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 9ம் தேதிக்குள் usabdirector@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர், இயக்குநர், பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை-600005, தொலைபேசி எண்: 044-25399518 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment