Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 16, 2020

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்தது 'பயோமெட்ரிக்' பதிவு

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, ரேஷன் கடைகளில் புதிய 'பயோமெட்ரிக்' இயந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

ரேஷன் பொருள் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில், கைரேகை பதிவு கட்டாயமாக உள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே, இனி, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். 

எந்தக்கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என்ற திட்டத்திற்கும், 'பயோமெட்ரிக்' பதிவு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், உடுமலை தாலுகாவிலுள்ள, 183 ரேஷன் கடைகள் மற்றும் மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 63 கடைகளுக்கு, புதிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில்,' ரேஷன் பொருட்கள் முறைகேடுகளை தடுக்கும் வகையில், கைரேகை பதியும், 'பயோமெட்ரிக்' வசதியுடன் கூடிய, புதிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது,' என்றனர்.

No comments:

Post a Comment