Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 16, 2020

'NET' தேதி மீண்டும் மாற்றம்: தேர்வர்கள் கோரிக்கை ஏற்பு

தேர்வு எழுதுவோரின் கோரிக்கையை ஏற்று 'நெட்' தேர்வு தேதியை மீணடும் மாற்றி தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஜூன் மாதம் நடக்க இருந்த 'நெட்' தேர்வு, செப்., 16 முதல் 25ம் தேதிக்குள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், செப்., 16 முதல், 23 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வுகளையும் எழுத பல மாணவர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.இதன் காரணமாக இரண்டு தேர்வுகளும் ஒரே நேரத்தில் வருவதால், நெட் தேர்வை வேறு தேதியில் நடத்த முன்பதிவு செய்திருக்கும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இதை ஏற்று நெட் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது.இதன்படி, உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிட தகுதிக்காக நடத்தப்படும் நெட் தேர்வு செப்., 24ம் தேதி துவங்கும் என, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. 

நெட் தேர்வுக்கான விரிவான அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விபரங்கள், ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment