Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 6, 2020

தொடர் இருமல், தும்மலை விரட்டும் ஏலக்காய்!

வாசனைப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுவது ஏலக்காய்.

சாதாரண சளி மற்றும் இருமலை விரட்டியடிக்கவும், நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம் ஏல‌க்கா‌யை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டாலே போதும். அடுக்குத் தும்மல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

செரிமானப் பிரச்சனைகள் மற்றும் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ப் பிரச்சனைகளுக்கும் ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சளி இருமல் ஆரம்பிக்கும் போதே சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலாம். அளவாகச் சேர்க்கவேண்டும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவற்றை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போட்டால் தலைவலி, சளி விலகும்.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களில் அதிக அளவு அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

அஜீரணக் கோளாறுகளால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவி விட்டாலே போதும். வாந்தி படிப்படியாகக் குறைந்து விடுவதைக் காணலாம்.

No comments:

Post a Comment