Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 6, 2020

தலைமைமுடியை கருமையாக்கும் அவுரி ஆயில்

அவுரி  வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

அவுரி ஆயில்

அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை. இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

No comments:

Post a Comment