Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 9, 2020

கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளை விழுப்புரம் கல்விமாவட்டத்தில் இணைக்க கோரிக்கை

கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளை செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைக்காமல், அருகில் உள்ள விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளை போக்குவரத்து மற்றும் நேர விரயம் காரணமாக செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைக்காமல், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இணைக்க வேண்டும்.

இதற்கு முன் திருக்கோவிலுார், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாகளில் இருந்த அனைத்து பள்ளிகளும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது.இதனால் இப்பள்ளிகளின் ஆசிரியர்களும், ஊழியர்களும் நிர்வாக காரணங்களுக்காக அடிக்கடி திண்டிவனத்திற்கு செல்ல வேண்டி இருந்தது.

போக்குவரத்து மற்றும் நேர விரயம் காரணமாக வந்த புகாரினால் கடந்த கல்வி ஆண்டில், திருக்கோவிலுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் இருந்து பிரித்து, தனியாக திருக்கோவிலுார் கல்வி மாவட்டம் என உருவானது.

தற்போது திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டதால், கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ளபள்ளிகளை செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதன்படி செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டால், ஏற்கனவே திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இருந்தது போலவே போக்குவரத்து சிக்கல் இருக்கும்.

உதாரணமாக காரணை பெரிச்சானுார், ஆற்காடு, அரகண்டநல்லுார், வி.புத்துார், ஆலம்பாடி ஆகிய பள்ளிகள் செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டால், விழுப்புரம் வந்து அங்கிருந்து செஞ்சி செல்லும் நிலை ஏற்படும்.

இந்த ஊர்களில் இருந்து விழுப்புரத்திற்கு நேரடியாக பஸ் போக்குவரத்து உள்ள நிலையில், இப்பள்ளிகளில் இருந்து விழுப்புரத்திற்கு 40 நிமிடங்களில் சென்றுவிடமுடியும். ஆனால் சற்றும் தொடர்பே இல்லாத செஞ்சி கல்வி மாவட்டத்தில் இணைப்பது சரியான தீர்வாக இருக்காது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே திருக்கோவிலுாருக்கு அருகில் உள்ள கொடுக்கப்பட்டு, ஒட்டம்பட்டு, சென்னகுணம், நாயனுார், ஆயந்துார், பையூர் ஆகிய உயர்நிலைப் பள்ளிகளையும், ஆற்காடு, அரகண்டநல்லுார், ஆலம்பாடி, வி.புத்துார், வீரபாண்டி, காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளி, சுயநிதிப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் இணைக்க, விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment