Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 9, 2020

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தற்போது ஆன்-லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன, எதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அதில் அடங்கி உள்ளன. இதை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

விருப்பத்தின்பேரில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் கூறும் விதிகளை மாணவ, மாணவிகள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி விட்டு வகுப்பறைகளில் அமர்தல், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல், எச்சில் துப்புதலுக்குத் தடை போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர், மாணவர் உரையாடலை திறந்தவெளியில் நடத்தலாம்.

அதேநேரத்தில் ஆன்-லைன் வகுப்புகளையும் தொடரலாம். இவ்வாறு சுகாதார துறை கூறியுள்ளது.

No comments:

Post a Comment