Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 8, 2020

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துக..!! பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தேர்வை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய எதிர்க்கட்சிகளின் மனுக்களும் தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியதாவது; வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்யும் வகையில் தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய உத்தரவு பிறபிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி முகமையின் வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வை கைவிட வேண்டும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நீட் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment