Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 8, 2020

இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22-ம் தேதி முதல் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதவிருந்த மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே கணினி, செல்போன், டேப்லெட், ஹெட்போன்கள் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்றும், Objective Type வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஆன்லைன் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், Mock Test என்ற பயிற்சித் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் அறிவுறுத்தல்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment