Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 8, 2020

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளமின்றி தவிப்பு

தமிழகத்தில் உள்ள 113 அரசு கல்லுாரிகளில் இரு ஷிப்ட்களில் 4084 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், உயர்கல்வித்துறை நிர்வாகம் ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. 

இதனால், கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பம் நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.அரசு கல்லுாரி (யு.ஜி.சி., தகுதி) கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் வி.தங்கராஜ் கூறியதாவது, ஏப்ரல், மே மாதங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வாதாரத்தை நடத்தினோம். 

தற்போது தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், 5 மாதமாக சம்பளமின்றி தவிக்கிறோம். மேலும், எங்களுக்கென யு.ஜி.சி., நிர்ணயித்த சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். விரைந்து ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வை நடத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment