Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 1, 2020

உடல் எடையை கட்டுக்குள் வைக்க!. இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்..


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர்தான். 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும்.

மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கின்றன.

நீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள். தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும். எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்.

கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தருகிறது. நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா? இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாக விளங்குகிறது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய நீரின் அளவு உங்களின் பாலினம், செயல்பாடுகள், ஆரோக்கிய நிலைகள் மற்றும் உங்களின் எடை போன்ற படிநிலைகளை பொறுத்து அமையும்.

ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது என்று கூறப்படுகின்றன.

ஆனால் சில ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பதை முடிவு செய்யும் முதல் காரணி உங்களின் எடை ஆகும்.

ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது முழுக்க முழுக்க அவர்களின் உடல் எடையை சார்ந்துள்ளது. பொதுவாக ஒருவர் எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமாகும்.

எப்படி நம் உடல் எடைக்கேற்றவாறு தண்ணீர் குடிப்பது பற்றி பார்ப்போம்

முதலில் உங்கள் எடையை கிலோவில் இருந்து பவுண்ட்க்கு மாற்றி கொள்ள வேண்டும்.

1 கிலோ என்பது 2.20 பவுண்ட் ஆகும். அதற்கு பிறகு உங்கள் எடையை 2/4 ஆல் பெருக்க வேண்டும்.

இது நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கும்.

உதாரணத்திற்கு உங்கள் எடை 200 பவுண்டாக இருந்தால் அதனை 2/4 ஆல் பெருக்கும்போது அது கிட்டதட்ட 113 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரும். 1 அவுன்ஸ் என்பது 29 மிலி ஆகும்.

இப்படி தண்ணீர் எடல் உடைக்கு ஏற்றவாறு நீங்கள் குடித்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் எடையும் உங்கள் கட்டுக்குள் இருக்கும்.

No comments:

Post a Comment