Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 1, 2020

TET தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய சான்றிதழ் என்பது ஏழு ஆண்டுகள் வரை தான் செல்லுபடியாகும் என்று ஏற்கனவே மத்திய அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் புதிதாக தான் தேர்வு எழுத வேண்டும்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் திறக்கப்பட்ட அண்ணாநூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு 7 ஆண்டுக்கு மட்டுமே. டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment