Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 30, 2020

கண் பார்வைக்கும் சருமப் பளபளப்பிற்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

பொதுவாக அனைத்து கீரை வகைகளும் உடல்நலத்திற்கு நல்லது. அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை தெரிந்துகொள்வோம்.

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

'கண்பார்வைக்கு' என்று சொன்னாலே நினைவுக்கு வரும் உணவுகளில் ஒன்று பொன்னாங்கண்ணி கீரை. உண்மையில் கண்பார்வை மட்டுமின்றி, கண்கள் சிவந்துபோதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும் பொன்னாங்கண்ணி கீரை ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

அதேபோன்று ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும்.

இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளுக்கு உதவும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

இதையனைத்தையும் தாண்டி சருமம் பளபளப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் பொன்னாங்கண்ணி கீரையை காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் உறுதியாக இருக்க தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment