Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 30, 2020

அறிவியல், பொறியியல் ஆராய்ச்சிகளில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்

அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ஸ்தாபனமான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (செர்ப்), ஆராய்ச்சித் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முற்றிலும் பெண் விஞ்ஞானிகளுக்கான செர்ப்-பவர் என்னும் திட்டத்தை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு கூடுதல் அதிகாரமளித்தலின் அவசியத்தை எடுத்துக் கூறினார். ஆராய்ச்சி வடிவமைப்புத் துறையில் இருபாலினரையும் ஒருங்கிணைக்கும் முயற்சி உலகளவில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 'ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிப்பது அரசின் முக்கிய முன்னுரிமைகளுள் ஒன்று' என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு ஃபெல்லோஷிப் மற்றும் மானியம் வழங்கும் இந்த செர்ப்-பவர் திட்டம், தேசிய அளவில் அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன் அரசின் இந்தத் திட்டத்தால் பெண் விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவதுடன், தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும்.

No comments:

Post a Comment