DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Monday, November 16, 2020

கும்ப ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மதிப்பும், மரியாதையோடு வாழ விரும்பும் கும்ப ராசி நண்பர்களே!

பிறரின் சிறுகுறைகளை கூடநீங்கள் பொறுக்க மாட்டீர்கள். பிறர் உங்களை பெருமையாக பேசவே விரும்புவீர்கள். பிறர் உதவியை நாடாமல் முன்னேற நினைப்பவர்கள்.பெண்களின் அன்பை எளிதில் பெற்று விடுவீர்கள். குருபகவான் இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதியபதவியும், சம்பளஉயர்வும் கிடைத்திருக்கும்.

வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பண ப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள். இப்படி பல்வேறு நன்மை- களை தந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும்.

வீண்அலைச்சல் ஏற்படும். அவர் 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர்14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் 2021 நவம்பர் 13-ந் தேதி அன்று முழு பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார்.

இது சிறப்பான இடம் இல்லை. அவரால் குடும்பத்தில் சிற்சிலபிரச்சினை வரலாம். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவைஇல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். 

அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்தநிலை மாறும்.துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகத -மான இடம். பல்வேறு நன்மைகளை தருவார்.

அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ஆனால் சனிபகவான்2020 டிசம்பர் 26-ந் தேதி அன்று 12-ம் இடமான மகர ராசிக்கு வருகிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை கொடுக்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம்.சனி12-ம் இடத்தில் இருக்கும்போது பொருளாதார இழப்பு வரலாம்.

வெளியூர் பயணம் ஏற்படும்.எதிரிகளின் இடையூறு அவ்வப் -போது வரலாம்.இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்துபார்வை கடகத்தில் விழுகிறது.இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேபடும்.

ராகு 4-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இந்த இடம் சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்க -லாம். கேது இப்போது 10-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதை - களை தரலாம்.இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் -கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.

இனி விரிவான பலனை காணலாம்.

குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும்.கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.வீடு-மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம்.அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். பொருட்கள் திருட்டுபோக வாய்ப்பு உண்டு. சற்று கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்க்கவும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம் வாகன சுகம் ஏற்படும். வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் அதிக கவனமுடன் இருக்கவும். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை குருவின் பார்வையால் முன்னேற்றத்தை காணலாம். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.முயற்சி செய்தால் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். பாதுகாப் பு தொடர்பான வேû லயில் இருப் பவர்கள் சிற ப் பான முன்னேற்றத்தை காணலாம்.

வணிகம் : வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். அதிகமாக உழைக்க வேண்டும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். புதியவியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.
அப்படியே தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. குடும்ப பிரச்சினையை மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல்வாதிகள், சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.

2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை குருவின் பார்வையால் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மற்றும் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புகழ்பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. மாணவர்கள் முயற்சிக்கேற்ற வளர்ச்சி இருக்கும். பிற்போக்கான நிலை இருக்காது.

2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை சிறப்பான பலனை பெறுவர்.நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். விவசாயம்: திருப்திகரமான வருவாயை காணலாம். வழக்கு விவகாரங் -கள் சாதகமாக இருக்கும்.

தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.. டிசம்பர் 26-ந் தேதிக்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். ஏப்ரல்4-ந் தேதி முதல் செப்டம்பர்14-ந் தேதிவரை விவசாயம் சிறப்படை -யும்.பாசிபயறு,மானாவாரிபயிர்கள்,துவரை,கொண்டைக்கடலை, மஞ்சள், பழவகைகள் நல்ல மகசூலை கொடுக்கும். பசுவின்மூலம் வருவாய் பெறலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும். .

வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை குருபார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி- வைப்பார். தோழிகள் உதவிகரமாக இருப்பர்.

குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நலம் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்- நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்ஞானிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள். ஊனமுற்ற மற்றும் ஏழைகுழந்தைகள் படிக்க இயன்ற உதவியை செய்யலாம்

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News