Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 17, 2020

சர்க்கரை நோயை குறைக்கனுமா? இந்த இனிப்பு கிழங்கை தேடி சாப்பிடுங்க

அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உருளைக்கிழங்கை விட இந்த இனிப்புசர்க்கரை கிழங்கு ஆரோக்கியத்தை அதிகமாக கொடுக்கும் என்று சொல்லப்படுகின்றது.

ஒரு கப் வேகவைத்த இனிப்பு கிழங்கில் கலோரி, கார்போஹைட்ரேட் புரதம், கொழிப்பு, வைட்டமி ன் ஏ, சி, மெக்னீசி யம்,பொட்டாசியம், தாமிரம் போன்றவை நிறைந்திருக்கின்றன.மேலும் இவற் றில் இருக்கும் அதிகப்படியான் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.

அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? சாப்பிட்டால் பலன் கிடைக்குமா? என்று தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிடலாமா?

இந்த இனிப்பு உருளைக் கிழங்கை சர்க்கரை வியாதிக்காரர்கள் எடுத்துகொள்ளலாம்.

இனிப்பு நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கின் இலைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த இலையை கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதாக கூறுகிறது.

வேறு நன்மைகள்?

தினமும் 30 கிராம் வரை இனிப்பு கிழங்கை எடுத்துகொள்பவர்கள் புற்றுநோய் பாதிப்பிலிருந்து குடலை மீட்டுவிடலாம். அதாவது புற்றுநோய் பாதிப்பில்லாமல் பாதுகாத்துகொள்ளலாம்.

குடலில் எரிச்சல், வயிறு மந்தம், குடல் நோய் போன்றவற்றையும் தடுக்கிறது. குடலிலிருக் கும் நோய்க்கிருமிகளை அழிக்கிறது.

இந்த இனிப்பு உருளைக்கிழங்கின் தோலில் இருக்கும் ஆன்டி ஆக்ஸி டெண்ட்,ஆந்தோசையனின் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை குறைக்கின்றன.இவைகண்களையும் பாதுகாக்கின்றன.

இனிப்பு கிழங்கில் பீட்டா கரோட்டின் மூலக்கூறு உள்ளது. இது இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறலாம். இவை சருமம் மற்றும் நரம்புகளை பாதுகாக்கிறது.

இனிப்பு கிழங்கை அவ்வப்போது எடுத்துகொள்வது உங்கள் உடலுக்கு போதிய வைட்டமின் சத்தை கொடுக்கும்.

இதில் கிழங்கில் இருக்கும் கொழுப்பு இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இவற்றை சாப்பிடும்போது வயிறு அடைக்கும் உணர்வு ஏற்படுவதால் உடல் பருமன் உண்டாவதையும் தடுக்கிறது.

இனிப்பு உருளைக்கிழங்கில் இருக்கும் ஆண்டோ சயின்கள் கண்களுக்கு நன்மை பயக்கும்.

​எல்லோரும் சாப்பிடலாமா?

சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையோடு மிதமாக எடுத்துகொள்வது நல்லது.

கிழங்கை க்ரிஸ்ஃபியாகதான் சமைக்க வேண்டும் என்று அடம்பிடிக்காமல் வேவைத்தும். பொரிய லாக்கியும் சாப்பிடுங்கள்.

குறிப்பாக தோல் நீக்காமல் வேகவைத்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட் டாலும் இதன்சத்துகள் முழுமையாக கிடைக்கும்.

No comments:

Post a Comment