Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 21, 2020

பள்ளிச் செல்லா குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்

சென்னை மாவட்டத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் உள்ளிட்டோரைக் கணக்கெடும் பணி, சனிக்கிழமை தொடங்குகிறது என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை மாவட்டத்தின் பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற (6 முதல் 18 வயதுடைய) குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி (1 முதல் 18 வயதுடைய) குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, சனிக்கிழமை (நவ.21) முதல் டிச.10 வரை நடைபெற உள்ளது.

மண்டல மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், கல்வித் தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களால் கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக தொழிற்சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கட்டடப் பணி நடைபெறும் இடங்கள், சந்தைப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா் நலத்துறை, குழந்தைகள் சிறப்புப் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து சோதனை செய்யும் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இக்கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அருகில் உள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்புகளில் சோக்கப்படுவா்.

இவா்களில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் கற்றல் திறன் அடிப்படையில் இணைப்பு சிறப்புப் பயிற்சி மையங்களில் சோக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் உடல் நிலை மற்றும் கற்றல் திறனுக்கு ஏற்றாற் போல் வீட்டுவழிக் கல்வி, பள்ளி ஆயத்த பயிற்சி மையம் மற்றும் முறையான பள்ளிகளில் சோக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, 97888 58382, 97888 58507 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களை அணுகலாம்.

No comments:

Post a Comment