Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 23, 2020

மருத்துவ பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று தொடக்கம்!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று தொடங்க உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. வழக்கமாக அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 399 இடங்கள், சிறப்பு பிரிவில் 60 இடங்கள் என, 459 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல், டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

முதல் நாளான இன்று முதல் 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அவர்களுடன் , பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டுமே , கவுன்சிலிங் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் .

தமிழக அரசு ஒதுக்கீட்டில் 4,179 எம் . பி . பி . எஸ் . இடங்கள், 1,230 பி . டி . எஸ் . இடங்கள் உள்ளன . நிர்வாக ஒதுக்கீட்டில் 953 எம் . பி . பி . எஸ் . இடங்கள், 695 பி . டி . எஸ் . இடங்கள் உள்ளன . கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மற்றும் உடன் வருவோர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment