Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 25, 2020

மலச்சிக்கலை முற்றிலும் அகற்றும் பயிற்சி!


பொதுவாக மலச்சிக்கல் பலவிதமான காரணங்களால் ஏற்படுகிறது.அதில் மிகவும் முக்கியமான காரணம் கருதப்படுவது தண்ணீர் பற்றாக்குறைதான்.

உடலில் நீர்சத்து குறையும் போது, குடல்களில் உள்ள தசைகள் சுருங்கி தேவையற்ற கழிவுகள் வெளியேற முடியாமல் உள்ளே தேங்கிவிடுகின்றன.

இதன் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம். மற்றும் தலைவலியும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனை சரி செய்ய என்னத்தான் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் ஒரு சில உடற்பயிற்சி, யோகசானங்களும் செய்தாலும் கூட இதனை விரைவில் கட்டுப்படுத்தலாம்.

அந்தவகையில் தற்போது மலச்சிக்கலை போக்கும் பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

செய்முறை

முதலில் குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும்.
இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும்.

கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும்.

ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.

பலன்கள்

இதனை சலபாசனம் என்று அழைக்கப்படும். வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது.
வயிற்றுப் பகுதி பலப்படும்.

பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.

மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும்.

முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். 

முதுகெலும்பு நோய் குணமாக்கும்.

No comments:

Post a Comment