Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 2, 2020

வங்கித்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

வங்கித் துறையில் அரசு வேலை பெற விரும்பினால், இப்போது உங்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.

வங்கி சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை, அதிகாரப்பூர்வ மொழி, மனிதவள, சந்தைப்படுத்தல்) பதவிக்கான அரசு வேலைக்கான (Sarkari Naukri) IBPS படிவத்தை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தேவையான தகுதிகளை நீங்கள் பெற்றிருக்கும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் 21-ம் தேதி (21.11.2020) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வின் பெயர் - சிறப்பு அதிகாரி (தகவல் தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை, அதிகாரப்பூர்வ மொழி, மனிதவள, சந்தைப்படுத்தல்)

காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை - குறிப்பிடப்படவில்லை

தகுதி - B.Sc., B.Tech. MBA, LLB

வயது வரம்பு -20 முதல் 30 வயது வரை

ஊதியம் - 14500 - 25700 / - மாதத்திற்கு

விண்ணப்ப கட்டணம்

IBPS நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொது, OBC மற்றும் EWS பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.850-யை விண்ணப்பக் கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, SC/ST மற்றும் PWD பிரிவுகளில் உள்ளவர்கள் ரூ.175 டெபாசிட் செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி மூலம் கட்டணத்தை செலுத்தலாம்..

ஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பு தொடங்கும் தேதி - 02.11.2020

ஆன்லைன் விண்ணப்ப சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி - 23.11.2020

விண்ணப்த்திற்க கட்டணம் செலுத்த கடைசி தேதி - 23.11.2020

ஆன்லைன் தேர்வு தேதி (நுழைவு) - 26.11.2020; 27.11.2020

ஆன்லைன் தேர்வு தேதி (மெயின்ஸ்) - 24.01.2021

எப்படி விண்ணப்பிப்பது..?

IBPS (Institute of Banking Personnel Selection) தேர்வில் தோன்ற, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இதற்காக, விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சரியான தகவலுடன் http://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த காலியிடம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு போட்டியாளார்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த காலிப் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment