Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 13, 2020

பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைப்பு மூன்று நாட்களில் வெளியிட முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

'பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை, மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:

அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை.இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான், தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும். 

மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment