Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 13, 2020

அரசு அலுவலகங்களில் கடைநிலை வேலைகளில் பட்டதாரி, இன்ஜினியர்களை நியமிப்பதால் பணிகள் பாதிப்பு: ஐகோர்ட் கிளை கருத்து

கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப் படுவது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடைநிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் அரசு பொதுப்பணி பெரிதும் பாதிக்கிறது. 

இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மை பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாள முடியவில்லை.

ஆனால், வரி செலுத்தும் அளவுக்கு கவுரவமான சம்பளத்தை பெறுகின்றனர். சமீபத்தில் ஐகோர்ட் நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிக கல்வித்தகுதியுடைய இவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறது. 

கடைநிலை பணிகளுக்கு கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ப உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment