Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 4, 2020

இந்திய ஆசிரியருக்கு ரூ.7.50 கோடி பரிசு !

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல்லாவுக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி என்னும் அறக்கட்டளை, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பாக சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்வு செய்து, அவர்களை ஒவ்வொரு வருமுடம் கௌவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் 10 ஆசிரியர்கள், இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் பரித்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்காக, அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில், 50 சதவீதத்தை, இறுதி சுற்றுக்கு தேர்வான, மீதமுள்ள, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்கு வழஙக்ப்போவதாக ரஞ்சித் அறிவித்துள்ளார்.

சிறந்த ஆசிரியருக்கான பரிசை வென்ற ரஞ்சித்சின்ஹ் திசேல்லாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment