JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 24% அகவிலைப்படி உயர்ந்தது என்று பரவும் தகவல் வெறும் வதந்தியே என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் நேற்று முதல் தாறுமாறாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
மார்பிங் செய்யப்பட்ட ஒரு படத்தில், மத்திய நிதி அமைச்சகம் 24% அகவிலைப்படி உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக இத்தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவுகிறது.
அகவிலைப்படி அரியர்ஸ் விரைவில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு இத்தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும், அகவிலைப்படி உயர்வு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே!
மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment