JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில் அடங்கிய, 733 காலியிடங்களை நிரப்ப, 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில், 52 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பொதுப்பணி மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில், திட்ட அலுவலர் மற்றும் சிறை உளவியலாளர், சிறை அலுவலர் பணிக்கு, 2019 டிசம்பரில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ளவர்கள், வரும், 9 முதல், 16க்குள், 'இ- - சேவை' மையங்கள் வழியாக, அசல் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். நேர்காணல் பதவிக்கு, 16ம் தேதி நேர்காணல் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment