Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 10, 2020

கல்வி உதவித்தொகை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி., மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி திட்டத்தில், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை, அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். 

சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை இனங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், கோட்புகளை சமர்ப்பிக்கவும், இன்று (டிச., 10) முதல் வரும், 31 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment