Subscribe Us

Thursday, December 10, 2020

கண் நோய்களுக்கு மருந்தாகும் பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணியை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும். கண் நோய்கள் விலகும். பொன்னாங்கண்ணி கீரையை நன்கு மைய அரைத்து அதை நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி வைத்திருந்து மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்து அவிழ்க்க கண் நோய்கள் பலவும் குணமாகும்.

பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.

No comments:

Post a Comment

Popular Feed