Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 11, 2020

'அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர் புதிய ஆசிரியர் பணியிடம் அவசியம்'

'அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்'' என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தக் கல்வியாண்டில், இதுவரை, பள்ளிகள் திறக்கப்படாதபோதும், மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பலர், தற்போது, அரசுப்பள்ளிகளில், சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது:

இந்தாண்டு, புதிதாக, 5 லட்சம் மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதற்கேற்ப, ஆசிரியர் எண்ணிக்கை இல்லை. கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வகுப்புக்குக் குறைந்தபட்சம் ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில், பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.பள்ளிகள் திறக்கும் முன்பு, தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பதவி உயர்வுக் கலந்தாய்வை நடத்த வேண்டும்; 

இதன் மூலம், ஆசிரியர், தலைமையாசிரியர் புதிய பணியிடங்களில், பள்ளி திறப்புக்கு முன்பே சேர முடியும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகள் சாதிக்க, இத்தகைய நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் துவக்க வேண்டும்.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.

No comments:

Post a Comment