Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 11, 2020

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு

வரும் 21க்குள் சமர்ப்பிக்க உத்தரவுதிருப்பூர், டிச. 11-லோக்சபா தேர்தல் பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.வரும் லோக்சாபா தேர்தலுக்கான பணி ஒதுக்கீடு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

பெரும்பாலும் தேர்தலை முழுமையாக நடத்தி முடிப்பவர்கள் அரசு துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தான். வாக்குசாவடிகளில் முக்கிய பணிகளில் ஆசிரியர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இதற்கான பிரத்யேக விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பணியாளர்களின் விவரங்களை சேகரித்து தனித்தகவல்(Database) பராமரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் விஜயகார்த்தியேகன் கல்வித்துறை அலுவலர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை:

துறை சார்ந்த பணியாளர்களின் விவரங்களை படிவத்தில் பதிவு செய்து வரும், 21ம் தேதிக்குள் அந்தந்த தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களையும், வாக்குச்சாவடி அலுவலர்களையும் அவர்கள் பெறும் ஊதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பதால், ஆசிரியர்கள் போட்டோ, வாக்காளர் பட்டியலின் பாக எண் மற்றும் வரிசை எண், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், தற்போது பெறும் ஊதியம் ஆகிய தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment