Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 11, 2020

'ஆன்லைனில்' வரைபட பயிற்சி: சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ஏற்பாடு

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியிலான நில வரைபடத்திறன் பயிற்சி இன்று துவங்குகிறது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, நடப்பு கல்வியாண்டில், 6 ஆயிரத்து, 173 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதளம் வழியாக நில வரைபடத்திறன் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. 

வரும், 15ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சியில் ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் பங்கு பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.கல்வி அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில் குறைந்த பணி நாட்களே உள்ளதால், ஒன்பது முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடப்பகுதி மற்றும் வரைபடங்களை தெரிவு செய்ய வேண்டும்.சுவர் வரைபடம், அட்லஸ் வரைபடம், ரயில்வே வரைபடம் போன்ற பலதரப்பட்ட வரைபடங்களின் மூலம் மாணவர்களின் இடமறியும் திறனை ஊக்குவிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புகளுக்கு புவியியல் சார்ந்த வடிவங்கள் அவற்றின் விளக்கங்கள் கற்பிக்க வேண்டும். இவையனைத்தும் இந்த ஆன்லைன் பயிற்சியில் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, வரைபடத்திறனில் மாணவர்களின் நிலையை கண்டறியும் வகையில், தேர்வு நடத்தபட்டு, அதன் தரவுகள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே, சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கலைப்பிரிவு முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் இணையவழி நில வரைபடத்திறன் பயிற்சியில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment