Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 21, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 யோகாசனங்கள்..!

நாள்தோறும் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது உடலில் இருக்கும் மெட்டபாலிசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சுவாசப் பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். கொரோனா பெருந்தொற்று நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையை நேரடியாக பாதித்தது. இதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு யோகாசனம் மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அந்தவகையில் சுவாசப் பாதை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும் எளிமையான 5 யோகாசனங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பாலாசனம் அல்லது குழந்தை ஆசனம்

இந்த ஆசனத்தை முறையாக செய்து வந்தால் கோபம் மற்றும் பதட்டத்தில் இருந்துவிடுபட்டு புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இடுப்பின் கீழ்பகுதியில் இருக்கும் அழுத்தம், சோர்வு ஆகியவை நீங்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

செய்முறை

தரைவிரிப்பில் முழங்காலிட்டு படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் தொடையின் மீது பட்டவாறு பின்புறமாக நீட்டிக் கொள்ள வேண்டும். தலையை இரண்டு தொடைப்பகுதிக்கு இடையில் தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் பகுதியானது முழங்காலிட்டு இருக்கும் முன்பக்க தொடைமீது இருக்க வேண்டும். தற்போது பின்புறமாக நீட்டி இருக்கும் கையை மெதுவாக முன்பக்கமாக நீட்டுங்கள். அப்போது காற்றை உள்ளிழுக்க வேண்டும். பழைய நிலைக்கு திரும்பும்போது காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.

தனுரசனா

தனுரசனா ஆசனம் செரிமான பிரச்சனைகளை நீர்ப்பதற்கும், வாயுத்தொல்லை நீங்குவதற்கும் உதவுகிறது. முதுகு தண்டுவடத்தில் இருக்கும் இறுக்கம் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆற்றல் குறையாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. ரத்த ஓட்டம் சீராக உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்றுவருவதில் தனுரசனா முக்கிய பங்காற்றுகிறது.

செய்முறை

விரிக்கப்பட்ட தரைவிரிப்பில் முகம் மற்றும் கண் பகுதி நிலத்தை பார்க்குமாறு படுத்துக்கொள்ள வேண்டும். நீண்ட வாக்கில் படுத்திருக்கும் நீங்கள், உங்கள் கால்களை பின்புறத்தில் மேல்நோக்கி உயர்த்துங்கள். முன் பக்க தலை மற்றும் கைகளையும் உயர்த்தி, கைகளால் கால்கள் இரண்டையும் நன்றாக பற்றிக்கொள்ளுங்கள். உடலானது வில் போல் வளைந்திருக்கும். உங்களால் முடிந்த வரை உடலை வளைத்துக்கொள்ளலாம். அதேநிலையில், 4 முதல் 5 முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

புஜங்காசனா (Bhujangaasana)

சமஸ்கிருத மொழியில் புஜங்கா என்பது ராஜ நாகம் தலையை உயர்த்தி இருக்கும் நிலை. முதுகுத் தண்டை பலப்படுத்துவதற்கு செய்யப்படும் இந்த யோகாசனம் அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும். செரிமானத்தை அதிகரிக்கவும், கல்லீரலில் இருக்கும் அழுத்தத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைவதற்கும் உதவுகிறது.

செய்முறை

வயிற்றுப் பகுதி தரையில்படுமாறு படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கால்கள் இரண்டும் இணைந்திருக்கும் நிலையில், இடுப்புப் பகுதி வரை தரையில்படுமாறும், தலைப் பகுதியை கைகளில் உதவியால் மேல்நோக்கி இருக்குமாறு உடலை வளைக்க வேண்டும். அதேநிலையில் 4 முதல் 5 நொடிகள் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்யும்போது மேற்கூறிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பாசிமோட்டனாசனா

செரிமானம் மற்றும் சோர்வை முற்றிலுமாக விரட்டும் பாசிமோட்டனாசனா, மூளையை மிகவும் சாந்தமாக இருக்க உதவுகிறது. கோவிட் வைரஸூக்கு பின் ஏற்படும் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்துகிறது.

செய்முறை

கால்களை முன்பக்கமாக நீட்டியவாறு தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் காலின் நடுப்பாதங்களை பிடித்தவாறு, தலையை முழங்காலுக்கு கீழாக வருமாறு உடலை வளைக்க வேண்டும். நெஞ்சுப்பகுதி முழங்கால் மீது இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது உங்களின் தலைப்பகுதியானது பாதத்துக்கு அருகாமையில் இருக்கும் கீழ் முட்டிக்கு அருகில் இருக்கும். 4 முதல் 5 நொடிகள் அதே நிலையில் இருந்து பின் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

விராபத்ராசனா

இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், முறையாக செய்வதற்கு உங்களிடம் ஆற்றல் இருக்க வேண்டும். தசைகளில் இலகு தன்மையை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இதயம் மற்றும் சுவாசத்துக்கு மிகச்சிறந்த பயிற்சி ஆகும்.

செய்முறை

முதலில் நேராக நின்று கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்தவாறு இடது காலை 3 முதல் 4 அடி இடைவெளியில் அகற்றி வையுங்கள். 90 டிகிரி அளவில் இருக்குமாறு இடது காலை வைத்து, வலது காலை மடித்து நில்லுங்கள். கைகள் இரண்டையும் வலது கால் இருக்கும் திசையில் வலது கையையும், பின்பக்கமாக இடது கையையும் ஒரே நேர்கோட்டில் நீட்டிக்கொள்ளுங்கள். பின்பு, தலையை வலது மற்றும் இடது பக்கங்களை நோக்கி திருப்புங்கள். இந்தப் பயிற்சியை இரண்டு மூன்று முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment