Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 22, 2021

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்




புஜங்காசனம்..!

யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும்.

புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.

இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், முதுகுத் தண்டு பலம் பெற்று முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

கிடந்த நிலை ஆசனங்களின் முதல்நிலையாக புஜங்காசனத்தை ஸ்வார்த்தம் சத் சங்கம் அறிவிக்கிறது.

மனம் :

முதுகெலும்பு , அடிவயிறு.

மூச்சின் கவனம் :

உடலை உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும்போது வெளிமூச்சு.

செய்யும் முறை:

முதலில் ஒரு விரிக்கையை தரையில் விரியுங்கள்.வெறும் தரையில் யோகாசனம் செய்யக் கூடாது. இப்போது குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

கால்விரல்கள் தரையில் படவேண்டும். குதிகால்கள் வானம் பார்த்தபடி இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை ஆழ்ந்து விடுங்கள்.

இந்த நிலையில்தான் ஆரம்பிக்க வேண்டும். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னாடி வளையுங்கள்.

இடுப்பு வரை தரையில் ஒட்டி இருக்க வேண்டும். கைகள் வளைக்காமல் நேராக ஊன்றி இருக்க வேண்டும். இந்த நிலை தான் பாம்பு நிலை ஆகும்.

இப்போது மெதுவாய் மூச்சு விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன் பின் மறுபடியும் பழைய நிலைக்கு வாருங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள் :

முதுகெலும்பு பலம் பெறுகிறது .

முதுகு வலி குறைகிறது .

தொப்பையைக் குறைக்கிறது.

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை நீக்குகிறது.

புஜங்காசனம், இரத்த வெள்ளையணுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தும்.

பெண்களுக்கான அற்புத பலன்களை இந்த ஆசனம் தரும். முகுகெலும்பை பலப்படுத்தும்.மலச்சிக்கல் அகலும். முதுகுவலி, இடுப்பு வலி நீங்கும். இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக் குறைக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தோள் மற்றும் பின் முதுகிற்கு வலிமையை அளிக்கும்.

இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.

பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.

உடல் ரீதியான பலன்கள் :

எடை குறையும், மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாகவும் உறுதியானதாகவும் ஆகிறது

கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.

மார்புத் தசைகள் விரிவடைந்து முதுகுத்தண்டு நரம்புகள் ஊக்கமடைகின்றன.

இளமைத் தன்மை நீடிக்கும்.


குணமாகும் நோய்கள் :

அதிக வேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்து வலி, கழுத்துப் பிடிப்பு , கூன்முதுகு, நுரையீரல் அலர்ஜி, ஆஸ்துமா , ஜீரணக் கோளாறுகள் , வயிற்றுக்கொழுப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.

ஜீரண சக்தி ,குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிகின்றன.

சர்க்கரை நோய் குணமாகும்.

ஆன்மீக பலன்கள் :

குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரப் படுகிறது.

நன்மைகள்:

ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி போன்ற பலவிதமான உடல் உபாதைகளை குணப்படுத்தி விடும்.

கிட்னியை பலப்படுத்த இந்த ஆசனத்தை செய்யலாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைக்கும்.

மலசிக்கல் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.


முக்கிய குறிப்பு:

இந்த ஆசனத்தை பொறுமையாக நிதானமாக செய்வது அவசியமாகும்.

ஆரம்ப கட்டத்திலே முழுமையான நிலை வராது. எனவே தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பின்பு நன்கு பழகிவிடும்.

முதுகு தண்டில் வலி உள்ளவர்கள், முதுகு தண்டு விலகி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை மருத்துவரை அணுகி பின்பு செய்வது நன்மை பயக்கும்.

சாதரண கழுத்து வலி, அலுவகங்களில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் வலி, அதிக தூரம் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் முதுகு வலி போன்றவற்றை இந்த ஆசனம் விரைவில் குணமாக்கி விடும்.

அதுமட்டுமில்லாமல் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு ஆகியவற்றின் எலும்புகளில் உள்ள குறைகளை நீக்குகிறது.

எச்சரிக்கை :

குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

No comments:

Post a Comment