20,000 காலியிடங்கள் : மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - கடைசி நாள்: 08-10-2022 - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, September 18, 2022

20,000 காலியிடங்கள் : மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - கடைசி நாள்: 08-10-2022

நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: தோராயமாக 20,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான எண்ணிக்கை விவரம் விரைவில் வெளியிடப்படும்.

பணியிடங்கள் விவரம்:

சம்பள ஏற்ற நிலை 7,6 (இளநிலை புள்ளியியல் அதிகாரி தவிர) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 01-01-2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும்.

சம்பள ஏற்ற நிலை 5,4 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 01-01-2022 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும். இருப்பினும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

62_2022_PRESS RELEASE


எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதி உடையவராவார்.

கல்வித் தகுதி:

Assistant Audit Officer/Assistant Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரும்பத்தக்கவை: பட்டய கணக்காளர்.

இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிப்பட்ட இளநிலை பட்டம் அல்லது புள்ளியியல் படிப்பு கொண்ட பாடநெறியில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

ஏனைய பதவிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 17.09.2022

இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 08-10-2022

08-10-2022 அன்றிரவுக்குள்ளே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்: 12-10-2022 முதல் 13-10-2022

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 2022, டிசம்பர் மாதம்

இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் முறை:

முதற்கட்ட எழுத்துத் தேர்வு(Tier- I), இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு (Tier- II) ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி உத்தேச தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad