Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 31, 2022

2023 நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கின!

இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாக `நெட்' (NET - National Eligibility Test)தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சார்பால் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய முடியும்.

தற்போது 2023-ம் வருட நெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 29 வியாழன் மாலை 5 மணியளவில் தொடங்கியுள்ளது. நெட் தேர்வை எழுத விரும்புபவர்கள், அதிகாரபூர்வ வலைதளமான ugcnet.nta.nic.in இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான தளம் டிசம்பர் 29 தொடங்கி, 2023- ஜனவரி 17-ம் தேதி வரை இருக்கும். நெட் தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடத்தப்படும். கணினி வழியாக நடத்தப்படும் இத்தேர்வுகள் இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடக்கும்.

முதல் ஷிஃப்ட், காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிஃப்ட் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டிருக்கும். இரண்டிலும் அப்ஜெக்டிவ் வடிவ கேள்விகள் இருக்கும். விண்ணப்பதார்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வினாத்தாள் கிடைக்கும்.

No comments:

Post a Comment