Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 21, 2022

மூட்டுவலி இருக்கிறவங்க இந்த 5 லட்டுகளை செஞ்சு ஸ்டோர் பண்ணிக்கோங்க... தினம் ஒன்னு சாப்பிடுங்க..!

குளிர்காலம் வந்துவிட்டாலே நம் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவிழந்துவிடும். இதனால் உடல் வலி , மூட்டு வலி , இருமல், சளி போன்றவையும் இருக்கும்.
எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் உணவு முறை மூலம் செய்வதே சிறந்த வழி. மாத்திரைகள் இருந்தாலும் உணவின் மூலம் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதே பக்கவிளைவுகளற்றது. இதை ஆயுர்வேத நிபுணர்களும் ஆமோதிக்கின்றனர்.

குளிர்காலத்தில் பெரும்பாலும் மூட்டு வலியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இதை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவின் மூலம் தவிர்க்க முடியும். அதற்கு சில ஆரோக்கியமான தின்பண்டங்களை பரிந்துரைக்கிறது இந்த கட்டுரை.

கோதுமை கோந்து லட்டு :



கோதுமை மாவு - 250 கிராம்
கோந்து - 100 கிராம்
அரைத்த சர்க்கரை - 200 கிராம்
பாதாம் - 2 tbsp
முந்திரி - 2 tbsp

செய்முறை :

கடாய் வைத்து நெய் தேவையான அளவு விட்டு முந்திரி, பாதாம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே கடாயில் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு கோந்துவை வதக்க வேண்டும். நன்கு உப்பி வரும் வரை வதக்க வேண்டும்.

அதையும் ஹனியாக எடுத்துக்கொண்டு 3 tbsp நெய் விட்டு மிதமான தீயில் மாவை கலந்துவிடுங்கள்.

மாவு நன்கு பிடித்தால் ஒட்டும் அளவுக்கு கலந்துவிட வேண்டும்.

பின் அதில் வதக்கிய கோந்து, நட்ஸ் வகைகளை சேர்த்து கலந்துவிட்டு பின் ஒவ்வொரு கைப்பிடி பிடித்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் கோதுமை கோந்து லட்டு தயார்.

வெந்தய லட்டு :



தேவையான பொருட்கள் :

வெந்தயம் - 50 கிராம்
பால் - 1 கப்
கோதுமை - 150 கிராம்
நெய் - 3/4 கப்
பீனட் பட்டர் - 2 tbsp

செய்முறை :

வெந்தயத்தை கடாயில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை நன்கு பொடியாக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி பால் கொஞ்சம் சேர்த்து புட்டுக்கு கிளறுவது போல் கலந்துகொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து நெய் விட்டு வெந்தயக் கலவையை சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் மீதமிருக்கும் பால் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க உதிரியான மொருவலாக வரும். அதை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் மீண்டும் கடாயில் நெய் விட்டு கோதுமையை கலந்துகொள்ளுங்கள். அதையும் வறுத்த வெந்தய பொடியுடன் சேர்க்கவும்.

இப்போது பாதாமை நெய் விட்டு பொன்னிறமாக வதக்கி பின் அதை மிக்ஸியில் அரைத்து அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் துருவிய தேங்காயை நெய் விட்டு வதக்கி சேருங்கள்.

கோந்துவை நன்கு பொடியாக்கி அதையும் சேர்த்துக்கொள்ளுஙக்ள். பின் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

பின் வெல்லம் உருக்கி அதையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு சூடு பதத்திலேயே உருண்டைகளாக உருடிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் வெந்தய லட்டு தயார்.

உலர் நட்ஸ் லட்டு :



தேவையான பொருட்கள் :

பேரிச்சம் பழம் 10
முந்திரி - 1/2 கப்
பிஸ்தா - 1 1/2 கப்
பாதாம் - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் பேரிச்சம் பழத்தை ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு முந்திரி , பாதாம், பிஸ்தா , திராட்சை அனைத்தையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த ட்முந்திரியையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்திவிடுங்கள்.

பின் சூடு பதத்திலேயே உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் உலர் நட்ஸ் லட்டு தயார்.

வெள்ளை எள் லட்டு :



தேவையான பொருட்கள் :

எள் - 1 1/2 கப்
நெய் - 1 tbsp
வெல்லம் - 1 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 tsp

செய்முறை :

முதலில் எள்ளை சூடேறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் வெல்லம் சேர்த்த் உருக்கொள்ள வேண்டும். நெய் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெல்லம் சவ்வு போல் உருக வேண்டும். தண்ணீரில் போட்டால் கரையவே கூடாது. மிட்டாய் போல் இருக்க வேண்டும்.

அந்த சமயத்தில் வறுத்த எள் சேர்த்து நன்கு கலக்கவும். கூடவே ஏலக்காய் பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

பின் உருண்டைகளாக உருட்டினால் எள் லட்டு தயார்.

புரோட்டீன் லட்டு :



ஓட்ஸ் - 2 கப்
பாதாம் - 1/2 கப்
முந்திரி - 1/3 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
வெள்ளை எள் - 1/2 கப்
குதிரைவாலி - 1/4 கப்
வெல்லம் - 1 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

ஓட்ஸை முதலில் வறுத்துக்கொள்ளுங்கள். பின் கொடுக்கப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அனைத்தும் சூடு தனிந்ததும் ஒவ்வொன்றாக அரைத்து அனைத்தை பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும்.

பின் வெல்லம் நன்கு உருக வைத்து அரைத்த பொடியுடன் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

பின் அதை உருண்டைகளாக பிடித்தால் லட்டு தயார்.

No comments:

Post a Comment