JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 245 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்கள், பெண்கள் என, 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு, கடந்த 14ம் தேதி, துவங்கி நடந்து வருகிறது.
இணை பதிவாளர் நந்தகுமார் மேற்பார்வையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடக்கிறது.நாள் ஒன்றுக்கு 1,500 பேர் பங்கேற்று வருகின்றனர். இத்தேர்வு, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment