JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் காரணமாக உடல் பருமனாக இருப்பவர்கள் மட்டுமின்றி பலருக்கும் இப்போது தொப்பை இருக்கிறது.
உடல் பருமனை காட்டிலும் பலரும் கவலைப்படுவது தொப்பையை நினைத்து தான். தொப்பையை குறைக்க பலரும் கடினமான உடற்பயிற்சிகளை செய்து சிரமப்படுவார்கள், அதுவே உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க முடியும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இப்போது உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமல் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்பது பற்றி இங்கே காண்போம்.
1) தொப்பையை குறைக்க முதல் வழி உங்கள் தட்டில் உள்ள உணவை ஒழுங்குபடுத்துவது தான், நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவை குறைக்க வேண்டும். பிடித்த உணவு என்பதற்காக அதிகமாக சாப்பிட்டுவிடாதீர்கள், இது உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
2) அதிகளவில் மது அருந்தினால் தொப்பை போடும், அதனால் நீங்கள் அளவோடு மது அருந்த வேண்டும். அதிக மது அருந்துபவர்களை விட குறைவாக மது அருந்துபவர்களுக்கு தொப்பை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3) புரதசத்து நிறைந்த உணவு வயிற்று கொழுப்பை குறைக்க உதவுகிறது, இது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை தூண்டி அதிக பசியுணர்வை ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதேசமயம் அதிகப்படியான புரதம் ஆரோக்கியமானதல்ல.
4) டிடாக்ஸ் ட்ரிங்க்ஸ் குடிப்பது உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றுகிறது. இது உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தவும், உடலிலுள்ள கொழுப்புக்களை எரிக்கும் வேலையையும் செய்கிறது. இதனால் உங்கள் வயிற்றுப்பகுதியிலுள்ள கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைந்துவிடும்.
5) உங்கள் தொப்பை வெளியில் தெரியாதபடி நீங்கள் தோரணையை அமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாய்ந்திருக்கும்போது அல்லது படுக்கும்போது உங்கள் வயிறு கவனிக்கப்படுகிறது. அதனால் தொப்பையை வெளியே காட்டாதவாறு இருக்க பழகுங்கள்.
6) வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடித்துவர தொப்பையின் அளவு குறைந்து வயிறு தட்டையாகும்.
7) அதிகளவில் உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டாம், அதிகப்படியான உப்பு உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, நீரின் எடையை அதிகரிக்கும் மற்றும் தொப்பை கொழுப்பையும் அதிகரித்துவிடுகிறது.
8) புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸ்கள் எடுத்துக்கொள்வது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நன்கு செரிமானமடைய செய்யவும் உதவுகிறது. உணவு விரைவாக ஜீரணமடைவதால் வயிற்றிலுள்ள கொழுப்புகளும் குறைந்துவிடுகிறது.
9) நார்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, அதனால் உங்கள் உணவில் அதிகப்படியான நார்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இது வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
10) எந்த உணவை சாப்பிட்டாலும் அதனை நன்றாக மென்று விழுங்கி முழுங்குங்கள், அப்போது தான் உணவிலுள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் செரிமானமாடையும் மற்றும் தொப்பையும் இருக்காது.
11) அதிகளவு சர்க்கரை சுவையுடைய உணவுகளை உண்ணுவதை தவிர்த்துவிடுங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை அருந்தாதீர்கள். அதற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடுங்கள்.
12) இரவு நேரத்தில் அதிகளவிலான உணவுகளை சாப்பிடாதீர்கள், இரவில் குறைந்த அளவிலான உணவுகளையே உண்ணுங்கள். அதேசமயம் இரவில் வெறும் வயிற்றில் தூங்கவும் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
13) சூயிங் கம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, நீங்கள் மெல்லும்போது உங்கள் உடலுக்குள் காற்று சென்று உடலை வீங்க செய்கிறது. இதனால் என்ன செய்தலும் உங்கள் உடல் எடை குறையாது, எனவே சூயிங்கம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது உங்கள் வயிறு விரிவடைவதைத் தடுக்கும்.
14) ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தூக்கம் முக்கியமானது, போதிய தூக்கமின்மை தொப்பை போடுவதற்கு வழிவகுக்கும். அதனால் தொப்பை மற்றும் உடல் எடை குறைய போதிய அளவு தூக்கம் வேண்டும்.
15) போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீங்கள் அதிகப்படியான கலோரி உட்கொள்வதை தடுக்கும், அதிக தண்ணீர் குடித்த பிறகு நீங்கள் முழுதாக உணர்கிறீர்கள். இதனால் உங்கள் பசியும் கட்டுப்படுவதோடு தொப்பை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
16) சர்க்கரை சேர்க்காமல் காபி குடிப்பது உங்கள் உடலுக்கு நன்மைபயப்பதோடு, வயிற்றையும் தட்டையாக வைத்திருக்கும். மேலும் 1 க்ளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிப்பது வயிற்று கொழுப்பை குறைக்கிறது.
No comments:
Post a Comment