Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 12, 2023

கஷ்டப்படாம உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இந்த கிழங்கை வாரத்துக்கு 2 முறை சாப்பிடுங்க..

நாம் அனைவரும் மார்கெட்டில் சேனைக்கிழங்குகளை பார்த்திருப்போம். இது மிகவும் சுவையானவை மட்டுமின்றி, டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் ஏராளமான வைட்டமின்களைக் கொண்ட ஆரோக்கியமான கிழங்கும் கூட.

இந்த சேனைக்கிழங்கை வட்டு கிழங்கு என்றும் அழைப்பார்கள். இந்த கிழங்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கரீபியனை பூர்வீகமாக கொண்டது. இது பூமிக்கு அடியில் வளரும் கல் போன்று கடினமான தோற்றத்தைக் கொண்ட ஒரு வகையான காய்கறியாகும். அசைவ உணவை சாப்பிடாதவர்களுக்கு இந்த கிழங்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த கிழங்கு ருசியாக இருக்கும்.

சேனைக்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டது. இது தவிர இந்த கிழங்கில் பொட்டாசியம், மக்னீசியம், செலினியம், ஜிங்க், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளதால், இது நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது. இதுமட்டுமின்றி, சேனைக்கிழங்கு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயலையும் செய்யும். முக்கியமாக இது விரை வீக்க நிலையை மேம்படுத்துகிறது. இப்போது சேனைக்கிழங்கை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

மூளையின் ஆரோக்கியம் மேம்படும்

சேனைக்கிழங்கு மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இந்த கிழங்கில் டியோஸ்ஜெனின் என்னும் கலவை உள்ளது. இது நியூரான்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே உங்களின் மூளை மற்றும் நினைவாற்றல் சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், சேனைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும்

சேனைக்கிழங்கில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை உடலுக்கு வழங்குகிறது. இவை அனைத்தும் சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. விலங்கின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சேனைக்கிழங்கு நிறைந்த உணவை உட்கொண்டு வந்ததில் குடல் புற்றுநோயின் வளர்ச்சி கணிசமாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆகவே புற்றுநோய் வராமல் இருக்க விரும்பினால், சேனைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்

சேனைக்கிழங்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை திறம்பட குறைக்க உதவுகின்றன. ஏனெனில் சேனைக்கிழங்கில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. இதில் நல்ல கொழுப்புக்களும், டயட்டரி நார்ச்சத்துக்களும் இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான உணவுப் பொருளாகவும் விளங்குகிறது. ஆகவே நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், உங்கள் உணவில் சேனைக்கிழங்கையும் அவ்வப்போது சேர்த்து நன்மை பெறுங்கள்.

மலச்சிக்கல் நீங்கும்

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் சேனைக்கிழங்கு அப்பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவி புரியும். மேலும் இது வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. முக்கியமாக சேனைக்கிழங்கை உட்கொள்ளும் போது, அது நல்ல பாக்டீரியாக்கள்/ புரோபயோடிக்குகளை இரைப்பை குடல் பகுதிக்கு அனுப்பி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே இரைப்பை குடல் பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு சேனைக்கிழங்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

எலும்புகளுக்கு நல்லது

சேனைக்கிழங்கில் போதுமான அளவு வைட்டமின் பி5, தயாமின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகளின் வளர்ச்சிக்கும் நன்மை புரிகிறது. எனவே நல்ல எலும்புகளின் வளர்ச்சிக்கு சேனைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

குறிப்பு

சேனைக்கிழங்கில் அரிப்பை ஏற்படுத்தும்/எரிச்சலூட்டும் பொருட்கள் உள்ளன. எனவே இவற்றை சமைக்கும் முன் துண்டுகளாக்கி, புளி நீர், வினிகர் நீர் அல்லது எலுமிச்சை நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். சேனைக்கிழங்குகளும் எளிதில் ஆக்ஸிஜனேற்றப்பட்டு நிறமாற்றமடையக்கூடியவை என்பதால், அவற்றை துண்டுகளாக்கியதும், உருளைக்கிழங்குகளைப் போன்றே நீரில் போட்டு வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment