Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 12, 2023

தக்காளியை உங்க உணவில் இப்படி சேர்த்துக்கோங்க...அப்புறம் பாருங்க...உங்க உடலில் நடக்கும் அதிசயம்!

தொழில்நுட்ப ரீதியாக பழம் என்று கருதப்படும் தக்காளி ஒரு சுவையான காய்கறியாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும் எல்லா உணவுகளிலும் தக்காளி சேர்க்கப்படுகிறது. இந்திய மக்கள் தங்கள் அன்றாட உணவுகளில் தக்காளியை சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களை செய்கிறது. முற்றிலும் பழுத்த, சிவப்பு நிறமாக இருக்கும் தக்காளி, அதில் சேர்க்கப்படும் எந்த உணவிற்கும் வித்தியாசமான சுவை சேர்க்கிறது. தக்காளி சுவையை அதிகரிப்பதைத் தவிர, உங்களை நிரப்புகிறது மற்றும் சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

தக்காளி பல உணவுகளிலும், அற்புதமான அலங்காரத்தின் நட்சத்திரமாக இருக்க முடியும். இவை, சாலட், சூப், சாண்விட்ச், சாஸ் மற்றும் காய்கறி என பல்துறை உணவுகளில் பயன்படுத்ததப்படுகிறது. பல அதிசய நன்மைகளை கொண்ட தக்காளியை, உங்கள் அன்றாட உணவில் சேர்க்க உதவும் சில எளிய வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தக்காளியின் நன்மைகள்

தக்காளியின் நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. தக்காளியில் பயோஃப்ளவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன, இது நாள்பட்ட வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவுகிறது. மேலும், தக்காளியில் லைகோபீன் நிரம்பியுள்ளன. இது சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை தடுக்க உதவும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தக்காளி கொண்ட உணவு மாகுலர் டிஜெனரேஷன் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், தக்காளியில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால், இது பார்வை குறைபாடு பிரச்சனையை சரிசெய்ய உதவும். உங்கள் உணவில் தக்காளியை அதிகமாக உட்கொள்வது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அவை வீக்கத்தைக் குறைக்கலாம், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கலாம், உங்கள் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் இரத்தம் உறைவதைத் தடுக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாண்ட்விச்களை தயாரிக்கலாம்

பெரும்பாலான மக்கள் உண்ணும் உணவாக சாண்ட்விச் உள்ளது. இதன் சுவையை அதிகரிப்பது எது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஆம், தக்காளி மற்றும் குடை மிளகாய் போன்ற காய்கறிகள் சாண்ட்விச்சின் சுவையை அதிகரிக்கும். எனவே, தக்காளியின் சில துண்டுகளை வெட்டி, அவற்றை இரண்டு ரொட்டி துண்டுகளுடன் சேர்த்து எளிய சாண்ட்விச் தயாரித்து சாப்பிடலாம்.

தக்காளி சூப் செய்யவும்

உங்கள் அன்றாட வழக்கத்தில் சில தக்காளிகளைச் சேர்ப்பது எளிதான வழிகளில் ஒன்றாகும். மேலும் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதுதான். குளிர்காலத்தில் எல்லாரும் சூடான சூப்பை விருப்புவார்கள். ஆதலால், நீங்கள் சுவையான தக்காளி சூப் செய்து குடும்பத்தோடு சாப்பிடலாம்.

சாலட் செய்யுங்கள்

தக்காளி சாலட்டை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். பல்வேறு ஆரோக்கியமான காய்கறிகளுடன் கீரைகளுடன் சேர்த்து நீங்கள் சாலட் தயாரிக்கலாம். தக்காளி மற்ற 10 பொருட்களுடன் சாப் சாலட்டில் இருப்பதைப் போலவே ஒரு கிளாசிக் கேப்ரீஸ் சாலட்டாக நீங்கள் செய்யலாம். தக்காளியுடன் மற்ற காய்கறிகளை சேர்க்கும்போது, ஆரோக்கிய நன்மைகளை இன்னும் அதிகமாக பெறலாம்.

முட்டைகளை சேர்க்கவும்

காலை உணவில் கண்டிப்பாக தக்காளியை சேர்த்துக்கொள்ளுங்கள். அது எந்த வகையான உணவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், டிஷில் நீங்கள் கூடுதலாக எதை சேர்க்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் தக்காளியோடு முட்டையை சேர்த்து சமைக்கலாம். முட்டையில் புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை தக்காளியோடு காலை உணவாக உட்க்கொள்ளும்போது, நீங்கள் அதிகட்ச பலன்களை பெறலாம்.

தக்காளி ஸ்மூத்தி

பெரும்பாலும், நாம் எல்லா உணவுகளிலும் தக்காளியை சேர்க்கிறோம். பச்சையாகவும் தக்காளியை பலர் சாப்பிடுகிறார்கள். எனவே உங்கள் ஸ்மூத்தியில் தக்காளியை ஏன் சேர்க்கக்கூடாது? நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்து, உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதேபோல, புதிய தக்காளி சாஸ், நிமிடங்களில் நீங்கள் தயாரிக்கலாம். அவற்றில் உங்களுக்கு தேவையான பூண்டு இஞ்சி கூட சேர்க்கலாம். இந்த சாஸை நீங்கள் பல உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment