Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 17, 2023

B E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு

சிவில் / எலெக்டிரிகல் / எலெக்ரானிக்ஸ் / கணினி அறிவியல் போன்ற பாடங்களில் கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான POWERGRID அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் ரூ.40,000 மற்றும் இதர தேவைகளுக்கு இணைத்து சம்பளமாக வழங்கப்படும். பணி நியமனத்திற்குப் பின்பு மாதத்திற்குச் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:


பதவியின் பெயர் கேட் தாள்
Engineer Trainee (Electrical) EE
Engineer Trainee (Electronics) EC
Engineer Trainee (Civil) CE
Engineer Trainee (Computer Science) CS

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 படி 28 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்:

ஒரு வருடப் பயிற்சி காலத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். பயிற்சி காலம் முடிவடைந்த பின் பணிநியமனம் செய்யப்படும். பணிக் காலத்தில் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பதவிக்கு ஏற்ற B.E./ B.Tech/B.Sc (Engg.) டிகிரி பெற்றிருக்க வேண்டும். 14.08.2023 இறுதி தேர்வு முடிவுகள் பெறும் இறுதி ஆண்டு படிக்கு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

கேட்-2023 இல் எடுக்கும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேட் 2023 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :

முழுமையான வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, இதர தகவல் விரைவில் https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment